Vannirayanvimmal's Blog

ஒரு பெண்னின் காதல்…
என்னையே பார்த்தாலும் ‘நீ பார்த்தமாதிரியிருந்துது அதுதான் பார்த்தேனென்று’ சாதிப்பான் கண்கொட்டாமல் அவன் பார்ப்பது தெரிந்தும் எங்கே நான் பார்த்தால் பார்க்கமாட்டானோ என்பதால் நான் பார்க்காதது போலிருப்பேன்

எதிர்பாராமல் முத்தம் கொடுத்தபோது முறைத்தேன் ‘சாரி’ என்று சிரித்தவன் திரும்பவும் முத்தமிட்டான் ‘சாரி’ எற்றபடியே

நனைந்தபடி ஒருநாள் வந்தான் என்னைப்பார்த்ததும் ‘அட நீ குளிச்சதானே’ என்றான்

எல்லாத்தையும் செய்துவிட்டு எதுவுமே தெரியாததுபோல இருக்க இவனால் மட்டுமே முடியும்

கதைச்சி கொல்லுறான்

சிலநேரம் கதைக்காமல் கொல்லுறான்

இவனைமட்டும் பார்க்காவிட்டால் நான் பெண்னென்பதையே உணர்ந்திருக்கமாட்டேன்

திடீரென திட்டுவான் பின்னர்

காலைப்பிடிச்சி அழுறான்

இவன் பிறந்தப்பவே நர்ச கிள்ளிட்டுத்தான் பிறந்திருப்பான்

போல…

இடுப்பை கிள்ளுறான் சினுங்கினா ‘வேனுமின்னா இந்தா கிள்ளிக்கோ’ என்கிறான்

அவன் உருகி என்னை கடவுளாக்கிறான் நான் உருக அவன் தொண்டனாகிறான்

அவன் அணைக்கும் போது நான் மெழுகாகிறேன் என்னை எப்போதுமே மெழுகாக்குறான்

ஒருநாள் எதையோ பறிகொடுத்தமாதிரி வந்தான் பதைபதைத்து என்ன என்றேன் சில நிமிட மெளனத்தில் என்னை கொன்றுவிட்டு ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்று கூறி சிரிக்கிறான்

வந்துட்டுது…
அடுத்தவொரு தெருதல் / தெரிதல் / தேருதல் / தேர்தல் என்ற ஒன்று, பலதைப்பார்த்தாச்சி பொன்னம்பலத்தார் காலந்தொட்டு வெள்ளக்காரன் அடிமைத்தனத்திலிருந்து (இப்பமட்டும் என்னவாக்கும்), சிறுபான்மை ஒடுக்கலிலிருந்து பெரும்பான்மை இருப்பிலிருந்து பயணைத்தான் சொல்லி மாளாது. புத்திசாலிகளென்றும் புத்திஜீவிகளென்றும் அறிவுச்சுடர்களென்றும் 1948 சுதந்திரத்திலிருந்தும் 1972 குடியரசானதன் பின்னிருந்தும் பலரை ஆட்சி பீடமேத்தியாச்சு குடும்ப அரசியல் இலாபத்தைத்தவிர கண்டதுதான் என்ன? பேசாமலிருந்து குள்ளத்தனமா பெறவேண்டிய உரிமையையெல்லாம் மேடைகட்டி முழக்கி உரிமை பெற்றுத்தாரேனென்று கூச்சல் போட்டு காட்டிக்கொடுத்து, தரமறுப்பவனுகளையும் சிந்தனைவாதிகளையும் கூட்டி விட்டதைத்தவிர எதை செஞ்சானுகள் இந்த புத்திமான்கள்? கத்திக்கத்தி கலைச்சுப்போய் பெருமளவு உயிர்களை காவுகொடுத்ததும், பொற்றுத்தாரேன்பார் உரிமையை என்று எண்பதுகளில் உதித்து உதிரத்திற்கு உதிரத்தல் பதிலடி, எவனாயிருந்தலும் சரி அது பிடிக்காதவன் உதிரமாயிருக்கனும் என்று கங்கனம் கட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்து (ஆச்சரியமாயல்ல அவலமாய்) ஊடகங்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல தீனி போட்டவர்களும் இன்று போயாச்சி பெரு யானை காதில சிறு எறும்பு புகுந்து செல்லரித்து கொன்றதைப்போல. வெட்டவெளிச்சமாச்சி நம்மகதை. காட்டிக்கொடுப்பதே குலத்தொழிலாச்சி அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை. அன்று ஆங்கிலேயனுக்கு மலையகத்தை காட்டிக்கொடுத்தவன் ஒரு இறைமையுள்ளவன் அதே இரத்தத்திலூறி இன்று விரல் தூக்கி காட்ட எத்தனையோ பேர் மேடைகளில், நாட்டை காட்டிக்கொடுத்தான் என்ற நவீன கூச்சலுடன். “அட உலக நடப்பெதற்கப்பா நமக்கு, நான் நம்மட உறவுகளையே தேடிக்கிட்டிருக்கிறேன் பலகாலமா அதையே கண்டுபிடிக்க முடியல்ல” என்று அங்கலாய்க்கும் சராசரி மனிதனுக்கு (இவன் இங்கு 10% ற்கும் குறைவான இனம்தான் கணக்கெடுப்பு எடுக்கும் வரையில இதையாவது சொல்லலாம்) என்ன நடந்தாலென்ன நாட்டுல அவனுக்குத்தேவை அவன் உறவின் நலம் என்றிருப்பவனிடம் போய் “நீ அவனுக்குப்போடப்போறியா இவனுக்குப்போடப்போறியா?” என்றால் என்னத்தைச்சொல்ல.

அவன் எய்யச்சொன்னான் இவன் எய்தான், இரண்டு பேருக்குமே நோக்கம் ஒண்டுதான். எய்ஞ்சி முடிய கேக்குறானுகள் “வலிச்சிதா?” எண்டு, இப்ப அவன் சொல்லுறான் வலிக்கு நான் காரணமில்லையெண்டு இவன் சொல்லுறன் அவன்தான் காரணமெண்டு. எத்தனைதடவைதான் சாகிறது எண்டு தெரியல்ல. இதுல இன்னொருவன் வேறு “நாந்தான் உன் இனம் எனக்கு போடு” எண்டுறான்.

எத்தனையோ வாய்புக்கள் வத்துதய்யா ஆனால் சொந்த நலனுக்காக, பொதுவாழ்விலீடுபட்டவனுகள் செய்த தப்புகளாலும், எதனையுமே நம்பாத போக்கும், நம்பவைத்து கழுத்தறுக்கிற போக்கும் எத்தனை எத்தனையோ சொல்லி மாளாது. இவனுகளையெல்லாம் தொலைச்சிபுட்டு மீண்டும் காட்டு வாழ்க்கை வாழ்ந்த என்னவெண்டிருக்கு, உணவும், பாதுகாப்பும்தான் தேடலாயிருக்கும் அதோடு வாழ்க்கை ஓடிடும், ரொம்ப திருப்தியாயுமிருக்கும். “என் உணவு நான் தேடி நானே பெற்றேன், என்பாதுகாப்பு நானே தேடி என் உரிமையையும் நானே நிலைநாட்டினேன்”, என்ற வாழ்வைவிட வேறேதப்பா சுகம். இங்க என்னடா எண்டால் உரிமையபெற்றுத்தாரேன் பார் எண்டு வெளிக்கிட்டவனுக்ளெல்லாம் இருந்ததையும் பறிச்சிட்டானுகள் எல்லாருமாச் சேர்ந்து.

சாமானியர்கள்தான் இங்கு அதிகம் சரித்திரமெல்லாம் இவன் அழிவாலேயே கட்டியெழுப்பப்படுகுது. என்னத்தச்சொல்ல விம்மி விம்மி நெஞ்சுடஞ்சிபோச்சி பெருமூச்சிவிட்டே சட்டி கருகிப்போச்சி.

குள்ளத்தனமும் கொலைகளும் குறைந்தபாடில்லை காட்டுமிருகங்களெல்லாம் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து சாக்கடையாக்கி அதுல சாப்பிடுதுகள், சுத்த மனமுள்ள எவனும் அதை எட்டிப்பார்ப்பதுமில்லையென்றாலும் ஒர்கட்டத்தில் நாடே சாக்கடையாகிப் போகும்போது சுத்தமனத்தை எங்கே தேடுவது???,

இப்ப ஐந்துவாரத்துல அதத்தாரனெண்டுறானுகள் இதத்தாரனெண்டுறானுகள், கேட்கப்பட்டதயும் தாண்டி வேணாமெண்டாலும் தருவேனென்று அடம் புடிக்கிறானுகள் இவனுகளேதான் ஐந்துவாரத்திற்குமுன் எதயுமே தரமுடியாது நீ இந்த நாட்டுக்குரியவனல்ல என்று முழங்கினவனுகள், அலுவல் முடிந்து ஐந்துவாரத்திற்குப்பின்னயும் இதத்தான் சொல்லுவானுகள். இருந்தாலும் ஒரு நப்பாசையில் அரைவாசியாவது தருவானுகளென்று போட்டலும் போடுவம் ஏனென்றால் நிராகரிப்பது துரோகமாமே?, அடப்போங்கப்பா எழும்பி நடக்கவே ஒருதுணை வேண்டும், இரண்டுகாலும் போச்சிதாம் ஜனநாயக துரோகம்தான் ரொம்ப முக்கியமாக்கும், தந்ததை வேண்டக்கூட முடியல்ல இரண்டு கையும் போச்சி, பார்த்து குத்த முடியாது இரண்டுகண்னும் போச்சி, எதையும் துணிந்து சொல்லமுடியல்ல நாக்கும் துண்டாப் போச்சி, நமக்கு காலைக்கடன் ஆவதே கருமாந்தரம் தினம் தினம், இதுல சொல்லுறானுக “புறக்கணிச்சிடாதீங்க” எண்டு, சும்மா பீத்திக்க வேண்டியதுதான் நாங்க விழுந்தாலும் மீசையில மண்படாதென்று இங்கதான் மீசையே இல்லையே இதுல எங்க மண் பட?

அதெப்பிடி முடியும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க, அதுலயும் தாயின்மானம், தங்கையின்மானம், தாரத்தின்மானம் போனபின்னும் போடச்சொல்லி கூச்சலிடுறானுகள். நல்லதீணி, நல்லவருமானம், நல்ல யாபாரம் பாக்குறானுகள் நம்ம முதுகில ஏறி நின்னபடி, எங்க ஒருத்தனையாவது எழும்பி நிண்டு உத்தரவாதப்பத்திரம் தரச்சொல்லுங்கய்யா பாப்பம், மாட்டானுகள் கேட்டா அதுதான் அரசியல் எண்டு ஒரு சாயமும் பூசுவானுகள் இப்பிடி, “நான் செய்வேன் என்னுவான், நான் செய்யச்சொன்னேன் என்னுவான், நான் சொன்னதை அவன் செய்தான் என்னுவான், நான் செய்யல்ல அவந்தான் செய்தான்” எண்டு பல்டி அடிப்பனுகள் மூனே நாளுக்குள்ள, அரசியல்ல கொஞ்சம்பேர் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பானுகள், கொஞ்சம்பேர் பதில்சொல்லிக்கிட்டே இருப்பானுகள் கொஞ்சம்பேர் குந்தி கேக்கிறதையே பொழப்பா கொண்டிருப்பானுகள் மிச்சப்பேர் விடிஞ்சது பொழுதுபட்டது தெரியாமலிருப்பானுகள். சாமானியனுகளெல்லாம் எனக்கு இதப்பத்தி கவலையில்ல நான் இண்டைக்கு உழச்சாத்தான் சாப்பிட முடியும் என்னுவானுகள்.

நடந்து முடிஞ்சதெல்லாம் போகட்டும் இனி நடப்பதைப் பார்ப்பம் எண்டாலும் எத்தனை தடவை “இந்தா முடிஞ்சுது பாருங்கோ” எண்டு வாயைப்பிளந்துகொண்டு பார்த்துக்கிட்டிருக்கும்போதே வாயுக்குள்ள கழிவக்கொட்டிவிட்டு போட்டானுகள், அப்ப எப்பிடி நம்புறது? என்பதுதான் கேள்வியா வாழுது. என்ன செய்யிறது போறன், போகவேண்டியிருக்குது போறன், மத்தவனுகள் போறானுகள் நானும் போறன் எண்டு சொன்னாலும் அதுவும் பயத்தோடதான் நடக்குது அதுவுமில்லாம நம்பிக்கையீனமானதுமான பயணமாகத்தான் இருக்குது. “நான் என் இடத்துக்கு போறன் அதை யார் கேக்கிறது?” எண்டு குரலெடுத்து துணிஞ்சு பேச யாருமில்ல, அட இதத்தானேய்யா உரிமையெண்டு கேக்குறானுகள் கொடுக்க யாருக்குமே மனசில்ல. உன்னட்ட என்ன கேக்கிறது பெற்றுகொடுக்கிறேன் பார் எண்டு புறப்பட்டவனுகளும் நீறுபூத்திட்டானுகள், அதுல கொஞ்சம் நிண்டு வாலாட்டுது, தண்ட வாழ்க்கைய கொண்டு ஓட்டுறத்துக்கு, அதுக்கும் கொஞ்சம் நிண்டு தூளிகட்டுதுகள் இணையத்துல, நாடுகடந்துகிடந்துகொண்டு. உள்ளயிருந்தும் ஒண்டும் கிடக்கல்ல, அங்கயிருந்துட்டு என்னத்தய்யா பன்னப்போறீங்க தப்பிபிழச்சி போனீங்க தந்திரமா வாழப் பழகுங்க, பூர்வீகமாமெண்டு மார்தட்டிய நமக்கே இங்க ஆப்பாம், ஓடிஒளிஞ்சு வாழுறவனுகளுக்கு பிரச்சனை வர ரொம்ப காலமாகுமெண்டு யார் கண்டா?, அதனால தந்திரமா வாழுங்க, ஏன்னா நீங்க படத்துல பாத்திருப்பீங்க ஆனா வலிச்சது நமக்கெல்லவா ?, படம்காட்டியவனொண்டும் தர்மகர்த்தா இல்ல அவனும் நல்ல கொழுத்த வியாபாரிதான் சுடச்சுட கொடுமைகளை உலக்கத்துக்கு விரித்ததால, நமீதாவின் படமில்லாத விளம்பரமே அவன் பக்கத்தில இருக்காது.

இப்ப என்ன ஆச்சி கருப்பொருளையும் தொலைச்சி. வெம்மிக்கிட்டிருக்கும் வேளையில வெந்த புண்னுல வேலைப்பாச்சுறானுகள், இழந்த உயிரைத்தவிர மத்ததையெல்லம் தாரனெண்டுறான், அடப்பாவி பறித்தவனே இவந்தானே உன்னட்ட நாங்க எதயுமே கேட்டதில்ல எனதுரிமையை நானே வச்சுக்கிறேன் எண்டு சொன்னதைத் தவிர, இப்ப என்ன புதினமெண்டா பறிச்சதுல கொஞ்சத்தை பட்டியல் போட்டு ஏதோ சும்மா தாரமாதிரி லைன் கட்டி பத்திரம் நிரப்புறானுகள் நயவஞ்சகர்கள். இந்தக்கூத்த என்னவெண்டு சொல்ல?

உலகப்பாதுகாவலனுகள் வேற வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வாரானுகள் வடிவான வாகனத்துல, பேசுறானுகள் வட்ட மேசையில தண்னிய வேற குடிச்சிக்கிட்டு, என்னத்த பேசுவானுகளோ தெரியாது ஆனா அடுத்த சந்திப்புக்கும் நாள் குறிப்பானுகள். கோட்டுசூட்டோடு வார இவனுகளுக்கு நம்மட விளக்கமே ஒழுங்கா இல்ல ஆனா நமக்கு சேவைசெய்ய வாரனெண்டுறானுகள் பாதுகாப்பு அனுமதியோட. எலாத்தையுமே வேண்டித்தருவோமெண்டுறானுகள் பறிக்கும்போது பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு. இவனுகட வாகனப்புழுதியால நம்மட சூழலெல்லோ தூசி, கரியானதுதான் மிச்சம், இதுல பகிடி என்னவெண்டா பேரழிவாயுத்தத்த உருவாக்குபவனுகளே இவனுகதான் அத விப்பதும் இவனுகதான் வியாபாரியும் இவனுகதான் சாவதென்னவோ சாமானிய நாமதான்.

தமிழகராதியில தொலைஞ்ச சொல்லெல்லாம் புதுசாவருகுது, வழக்கொழிஞ்சதெல்லாம் வருகுது, வாழ்க தமிழ் அழிக தமிழினம் எண்ட கதையாய்ப் போச்சு. இதுக்குள்ள செந்தமிழ் மாநாடாம் ரொம்பத்தான் முக்கியம், மாநாடெல்லாம் நல்லாத்தான் நடத்துறீங்க, உண்ணாவிரதமெல்லாம் நல்லாத்தான் இருக்கிறீங்க சுழற்சிமுறையில அதுல சேர்த்ததென்னவோ நல்ல புகழத்தான். இவனுகள் நல்லா பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டப்பாக்கிறவனுகள்.

எங்க உலகத்திலிருந்து ஒருதலைவன் ஆயுதத்தை ஒழிக்க முன்வரும் தலைவன் ஒருவனைக் காட்டுங்க பார்க்கலாம், அப்படி யாராவது முன்வந்தா அவனிட்ட இருக்கும் மத்தவங்களை அழிக்கும் பேராயுதம். காட்டுவிலங்குகளிட்ட இருந்து தப்ப கண்டுபிடிச்ச கல்லு, தடி, ஈட்டிய எப்ப மனிதன் தன் இனத்திற்கெதிராகவே மண்னுக்காகவும், பொன்னிற்காகவும் பயன்படுத்த வெளிக்கிட்டானோ அன்று தொடங்கிய யுத்தம், அழிவு இன்னும் முடிந்த பாடில்லை, ஆனால் இதுல அழிஞ்சதென்னவே அதிகளவில் சாமானியன்தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் வரலாரெல்லம் அழிச்சவன் பெயரால் மட்டும் போற்றப்படுகுது. அவந்தான் உதாரணபுருஷன், வரலாற்று நாயகன், அப்புறமென்ன புது வரலாறு படைக்க வேண்டுமென்றால் அழிச்சுத் தள்ள வேண்டியதுதானே, புதுவரலாறு படைக்க புறப்பட்டவனுகளெல்லாம் தன்னினத்தை அழிக்க ஆரம்புச்சுட்டானுகள். பிச்சது வேண்டாம் நாயைப்பிடியென்றால் பச்சத்தண்ணியில பலகாரம் சுடக்கூப்பிடுறானுகள். கூழக்கும்பிடுபோட்டு ஆட்சிக்கு வாறானுகள் வந்தபின் ஆட்டு ஆட்டு என்று ஆட்டுறானுகள் நம்மள, நல்லா அனுபவிக்கிறானுகள் அநியாயத்தை செஞ்சி, அப்பிடியே பெரும்புள்ளியாயிடுறானுகள். கிடச்சா அது அல்லாட்டா இது எண்டு அவனுகள் தெளிவாகத்தான் இருக்கிறானுகள் நம்மளத்தான் ஒவ்வொரு தடவையும் குழப்பிவிடுறானுகள். நல்லா பேசுவானுகள் நாணயத்தத்தான் கானவே கானோம். தேவையுடைய ஒருத்தி விபச்சாரியாவது போல நம்மள விபச்சாரியாக்கி அனுபவிச்சிட்டுப் போறானுகள். திருப்பியும் வருவானுகள் நல்லா திணிச்சிட்டு துப்பச்சொல்லுவானுகள் எப்பிடி துப்புறது விழுங்கித்தான் ஆகனும், செத்தாலும் இவனுகளுக்கு இலாபம்தான். மனுசராடா இவனுகளெல்லாம் மந்தைக் கூட்டங்கள் என்றால் அவனுகளுக்கு நல்லாத்தெரியும் நாமதான் மந்தைகூட்டமெண்டு.

இதுல ஒருத்தனோ அல்லது ஒருகூட்டமோ எதிர்க்க துணிந்தால் அவனுகளும் கொஞ்ச நாளில நம்மள மந்தைக்கூட்டமாக்கிடுறானுகள் என்றது நாம கற்ற பாடமல்லவோ ?. நாமளாவது மனுசரா இருக்கப்பாப்பம் அல்லாட்டா வாழாவிருப்பம்.

சாமானியனுகளெல்லாம் இப்பிடி காத்தியே சாவதா???

வெட்கம் கெட்டவர்கள்>>>>>>
எம்மூரில் இப்போது, பல்லை இளித்தபடி வீடு வீடாக ஏறி இறங்குகிறவர்களே இவர்கள், யாரென்றே தெரியவில்லை பலருக்கு, ஆனால் பெயரின் முன்னால் “பிரபல சமூகசேவையாளர்”, “மக்களின் தோழன்”, “சேவையின் நாயகன்”, என்னும் பட்டங்கள் ஏராளம் உண்டு இவர்களிற்கு…………………………..

ஒரு வகையில் நாயகர்கள்தான் இவர்கள், மக்களிடம் கப்பம் கோரி நச்சரித்தவர்கள், போன் பன்னி ஏற்கனவே கொடுத்துவைத்தவர்கள் போல “ஐந்து இலட்சம் தா, இல்லாவிட்டால் தெரியும்தானே போன கிழமை அந்த கடை முதலாளிக்கு நடந்தது என்னவென்று” என ஒலித்த குரல்களே இவர்களுடையது, சில வேளைகளில் “நாங்கள் ABCD அமைப்பிலிருந்து பேசுகிறோம் எங்களிற்கு இத்தனை இலட்சம் தேவை, இந்த திகதியில் வேண்டும், எங்கள் காரியாலயத்தில் வந்து கட்டி பற்றுச்சீட்டை பெறவும்” எனக் அமைப்பு ரீதியாகவும் அலுவலக ரீதியாகவும் கேட்ட, தமிழின மக்களின் அசைக்கமுடியாத பலம் பொருந்திய “பாதுகாவல நாயகர்களே” இவர்கள்

நடு நிசியில் வீட்டினுள் புகுந்து, தாலிக்கொடி முதற்கொண்டு பறித்து, TV போட்டு நாடகம் பார்த்து நகைச்சுவையாகச் சென்ற “சமூக ஆர்வலர்களே” இவர்கள். “இப்படி காசு கொடுத்தே நொந்து இனிமேலும் கொடுக்க ஒன்றுமில்லையென்ற பல ஆண்களின் உயிரைப் பறித்து பல பெண்களின் தாலியறுத்து,  ஊரை விட்டே ஓடிச்செல்ல வைத்த “இனக்காப்பு எம நாயகர்களே” இவர்கள்,

பல பிஞ்சுகளை தகப்பனற்றவர்களாக்கிய கனவான்களே இவர்கள், அன்றாட விவசாயிகளிடம் கூட இவ்வளவு தா, இல்லை உன் ஆண் பிள்ளை பிணமாவான் எனக்கூறி அவர்கள் வீட்டின் முன்னாலேயே சென்று பணம் பெற்றுச்சென்ற “புதல்வர்களே” இவர்கள், பலரை கடத்திச்சென்று பேரம் பேசி பணத்தை பெற்ற பின்னும் கொலை செய்து தலையை ஓரிடத்திலும், முண்டத்தை வேறோரிடத்திலும் போட்டுச் சென்ற “மாவீரர்களே” இவர்கள்,

பணத்தின் தொந்தரவு தாங்க முடியாமல் பலரை சொந்தமண்ணை விட்டே ஓடவைத்த “மண்னின் மைந்தர்களே” இவர்கள். ஊர் ஊராய்ச் சென்று வீட்டின் அளவிற்கேற்ப விலை வைத்து பணம் பெற்ற “நியாயவாதிகளே” இவர்கள்,

பிடிக்காதவன் தலையைக் கொய்து வெறியாட்டமாடிய “தலைப்புதல்வர்களே” இவர்கள், பாடசாலை மாணவர்களிடையேகூட கோஷ்டிகளை உருவாக்கிய “உத்தமர்களே” இவர்கள், தம் இச்சைக்கென பல பெண்களைக் குதறிய “குபேரர்களே” இவர்கள்,

ஊர் பணத்தில் தண்னி, தீணி என உடல் வளர்த்த “பெருசுகளே” இவர்கள், ஐந்து ரூபாய்ப் பொருளை ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கவைத்த “வியாபாரக்காந்தங்களே” இவர்கள், ஐந்து இலட்சம் கப்பம் கேட்டு கடைசியில் ஐந்நூறு ரூபாய் ரீலோட் கேட்ட “வறியவர்களே” இவர்கள்,

ஆறு மணிக்கு மேல் ஊரை அடங்கவைத்து, பக்கத்து வீட்டில் அலறல் கேட்டால் கூட கதவை இழுத்துப் பூட்டும் மனிதாபிமனத்தை ஏற்படுத்திய “பாதுகாவலர்களே” இவர்கள், கல்யாணவீடுகளைக்கூட கஞ்சத்தனமாக செய்யவைத்த “புண்ணிய மூர்த்திகளே” இவர்கள்,

பல தாய்மாரை, வீதியில் கழுத்தறுபட்டுக்கிடந்த ஆண்மகவுகளை பார்த்து கதறியழ வைத்த “கருணைக்கடல்களே” இவர்கள், கையை காலை வெட்டத்துணியாதவர்கள், ஆனால் கழுத்தை இரசித்தே வெட்ட முண்டியடிப்பவர்களே இவர்கள்,

“உயிர் போகும் வலியென்றாலும் விடிந்த பின்தான் வைத்தியம் செய்யவேண்டும்” என்ற நிலையை உருவாக்கிய “நிறுவுனர்களே” இவர்கள்,

இங்கு பிணங்கள் குவிந்தாலும் TV பேட்டியில் தண்ணீரை குடித்து காலை ஆட்டியபடி, “அங்கு எம்மக்களிற்கு எந்தப்பிரச்சனையுமில்லை எல்லாம் கட்டுக்கதை” என கூலாகக் கூறிய “மக்கள் தலைவர்களே” இவர்கள்

அதிகாரமிருந்தபோதெல்லாம் ஆட்டிவிட்டு ஆக்கத்தையெல்லாம் அழிவால் மறைத்துவிட்டு இபபோது தாம் எப்போதோ செய்ததை மட்டும் மார்தட்டிக் கூறியபடி வரும் “மறதிவாதிகளே” இவர்கள்.

பிணம் பிணமாகக் குவியும் போதும் பணம் பணம் என அலைந்த “பணந்திண்ணிகளே” இவர்கள், நம்மின அழிவிலும் அரசியல் பார்த்த “மகாபராக்கிரமவாதிகளே” இவர்கள்,

கிரவல் பூமியில் கிளர்ந்தெழும் தூசியை குருதியால் அடக்கிய “சூழலியலாளர்களே” இவர்கள், தினம் தினம் சாதாரண மக்கள்ளையெல்லாம் எப்படி அசாதாரணமானவர்களாக்குவது என சிந்தித்த சிந்தனைவாதிகளே இவர்கள்,

புத்திஜீவிகள் பலரை இரவோடிரவாக நாட்டைவிட்டே குடும்பத்துடன் குடிபெயரவைத்த “குடியகழ்வாளர்களே” இவர்கள்,

சகோதரமொழிக்காரனுடன் கைகோர்த்தபடி தன் சகோதரனையே பிய்த்துச் சாப்பிட்ட “இரத்தவாதிகளே” இவர்கள்,

காட்டிக்கொடுத்தே எத்தனை நாள் வாழ்வது, கழுத்தறுத்து வாழ்வோம் என புறப்பட்ட “வீரவேங்கைகளே” இவர்கள், பல பெண்களை எட்டிஉதைத்து, கதறக்கதற ஆண்களை இழுத்துச்சென்று மறுநாள் துக்க வீட்டை ஆக்கிய “துக்கவிரும்பிகளே” இவர்கள்,

கோவில்களில் கூட நடுநிசிப்பூசைகளை மாலை ஐந்துமணிக்கே நடாத்தும்படிச் செய்த “ஆன்மீகவாதிகளே” இவர்கள்,

கடைகடையாய் ஏறி மாதக்கட்டணம் வசூலித்த குறுநில மன்னர்களே இவர்கள், எண்ணை வரி, தேங்காய் வரி, கயிறுவரி, (நாய்வரியைத்தவிர) என வசூலித்த “துரைமார்களே” இவர்கள்,

சனிப்பிணம் தனிப்போகாது என்பதை உறுதிப்படுத்த பலரை கூண்டோடு கைலாசம் அனுப்பிய “மோட்சவழங்குனர்களே” இவர்கள்,

மக்களை வகைவகையாய் கூறுபோட்டு விற்ற “வியாபாரிகளே” இவர்கள், உண்ண உணவில்லை உடுத்த துணியில்லை என்ற போதும் உரசிப்பார்த்த “உபகாரர்களே” இவர்கள்,

கொலை, கொலை, கொலை என வீதிகளிலெல்லாம் பிணங்களை இழையவிட்டு, சூடான கொலைச் செய்தியே விடிவாக ஏற்படுத்திய “செய்திஆக்குனர்களே” இவர்கள்,

ஒரு காலத்தில் மாலையில் ஆண்கள் கூடி அடுத்த கோவில் திருவிழாவில் செய்யப்போகும் நாடகத்தைப்பற்றியும், விளையாட்டின் மூலமும் கழித்த பொழுதுகள் தொலைந்து, அன்று அதுவரை நடந்த அநியாயக் கொலைகள் எத்தனை?, எதனால்?, எப்படி?, யாரால்?, எங்கு?, எப்போது?, என பிரயோசனமான கணக்கெடுப்பு நடாத்த வைத்த “பெருமைவாதிகளே” இவர்கள்,

தான் உருவாக்கிய அமைப்பின் கடைக்குட்டியை ஊரெல்லாம் ஆட்டம் போட விட்டுவிட்டு, தனது வாழ்க்கையை சொகுசாக வெளியூர்களில் வாழ்ந்த “அமைப்புத்தலைவர்களே” இவர்கள்,

அன்பு, பண்பு, நட்பு, ஆன்மீகம், விழுமியம், கலாச்சாரம் என எல்லாத்தையும் குழிதோண்டி புதைத்து ஏப்பமிட்ட, “சீர்திருத்தவாதிகளே” இவர்கள்,

பார்ப்போரையெல்லாம் சந்தேகப்படவைத்து, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட வீட்டுக்கதவை பூட்டவைத்த, வந்தாரை வாழவைத்த பூமியில் பிறந்த “இரக்கரூபங்களே” இவர்கள்,

பட்டப்பகலில் கூட வீட்டுக்கதவிற்கு ஆமைப்பூட்டு போடவைத்த “ஆத்மார்த்தவாதிகளே” இவர்கள்,

பத்து கிலோமீற்றர் தூரத்தை பதினைந்து சாவடிகடந்து ஐந்து மணித்தியாலம் பயணிக்கவைத்த மக்கள் “நலன்விரும்பிகளே” இவர்கள்,

பிடிக்காதவன் ஒருவனுக்காக அவன் பரம்பரையையே தேடிச்சென்று துரத்தியடித்த “பரம்பரை வாதிகளே” இவர்கள்,

ஒரு அமைப்பாகத்தேன்றி, ஒன்பாதாக உடைந்து கூடப்பழகியவனையே குத்திக்கொன்று பதவி பெற்ற “பவித்திரர்களே” இவர்கள்,

ஓராயிரம்பேர் ஊணமுற்றுக்கொண்டிருக்கையில் ஊணுக்காக உண்மையைமறைத்து பிரச்சாரம் செய்த “சத்தியவான்களே” இவர்கள், சொந்தத் தொலைபேசியில் கூட உள்வரும் அழைப்புகளை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய “நிர்ப்பந்தவாதிகளே” இவர்கள்,

பல இழப்புகளை பணமாக்கி அதில் சாமிக்கு அங்கவஸ்திரம் சாத்தி, தலையாரிப்பட்டம் பெற்று, சப்பரமும் தூக்கிய “சர்ப்பங்களே” இவர்கள்,

பிஞ்சுகளை பார்த்து பூரித்த மனம் எரிந்து, பணத்திற்காக அவர்களை கடத்தி உறைப்பையிலிட்டு வீதியிலெறிந்த “அரக்கர்களே” இவர்கள்,

இவ்வளவு அறிமுகமும் உள்ள இந்தக் கணவான்களை இன்னுமா தெரியவில்லை? இல்லையெனில், வாருங்கள் எம்மூர் வீதிமுழுவதும் சிரித்தபடி போஸ் கொடுக்கும் சுவரொட்டிகளில் கானலாம், பல வாசகங்களுடன் இந்த வெட்கம் கெட்டவர்களை,

இவர்கள் தற்போது மக்களிடம் கேட்பது வேறெதுவுமில்லை “ஒரு வோட்டு போடுங்கம்மா _ _ _ _ _ _ சின்னத்தைப்பார்த்து” என முழங்குகிறது ஒலிபெருக்கிகள், பிரச்சார மேடைகள்,

இங்கு சந்தேகம் ஒன்றுதான் உண்மையில் வெட்கம் கெட்டவர்கள் யார்? கேட்பவன் வெட்கம் கெட்டவனா? இல்லை கேட்கப்பட்டவன் வெட்கம் கெட்டவனா? என்பதே, விடை எதுவாயினும் ஒன்றுமட்டும் நிச்சயம் இவர்கள் அனைவரும் வெட்கம் கெட்ட “தமுலன்” இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதே………………………………………….

விம்மல்: ஆயுதக்கலாச்சாரம் உலகம் முழுவதிலிருந்தும் ஒரே நாளில் ஒழிந்து போகாதா?

ஒரு உணர்வுப் போராட்டம் >>>>>>>>
ஒரு உணர்வு

எனக்குள்ளே தினமும் ஓடும்

அதில் அதிக விருப்பமிருந்தாலும்

என்னால் தனியாக முடிவெடுக்க முடியாத

குடும்பசூழலில் பிறந்து விட்டேன்

தந்தையில் பயம் கலந்த மரியாதை, தாயிடம் பயமறியா பாசம்

சகோதரங்களுடன் நல்ல இணைப்பு

மூத்த சகோதரர்களை மீற விருப்பமில்லை

இளைய சகோதரர்களுக்கு பிழையான உதாரணமாகி விடக் கூடாதென்னும் பயம்

இவ்வளவும் புத்திக்கும் தெரிந்தும்

மனதிற்குத்தெரிவதாயில்லை

விளக்கங்கள் ஆயிரமிருந்தும் விளங்குவதாயில்லை

தெரிந்து செய்வது தப்பு எனவும்

தெரியாமல் செய்வது தவறு எனவும் கொண்டால்

தெரிந்தும் தெரியாமல் நடப்பதை எந்த நிலையினுள் அடக்குவது?

இதுவே என் நிலைமை!

பலங்கள் பலவிருந்தும் சில பலவீனங்கள் அனைத்துப் பலங்களையும்

தூக்கிச்சாப்பிட்டுவிடும் போல் உள்ளது

சமூக விரோதச் செயலாக இல்லாவிடினும்

சமூகம் விமர்சிக்கும் என்ற பயம்

அதென்ன சமூகம், ஒரு மனிதனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத சமூகம் அது எனக்குத் தேவைதானா? என தூக்கியெறிந்துவிட்டு வாழவும் துணிவில்லை,

ஏனெனில் இந்த சமூகத்திலேயே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்

வேறு வழியென்ன? மனத்தை கட்டுப்படுத்துவதா? பலதடவை செய்து பார்த்தாயிற்று

ஆனாலும் சும்மா பம்மாத்துக் காட்டியெதே தவிர உண்மையில் கட்டுப்படுத்த முடியவில்லை, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தால் இவ்வுலகின் உண்மைகள் யாவும் விளங்கிவிடலாம் அதிலிருந்து உலகின் மாயைத்தன்மையை புரிந்துகொள்ளலாம் என்றாலும் அதை அறிய அதிக ஆர்வமில்லை, ஏனெனில் என்விருப்பங்கள் யாவற்றையும் இழக்கவேண்டியிருக்குமென்பதால்,

ஆனாலும் ஏதோ நடக்கும் அதை அனுசரித்து வாழலாம் என்பது உண்மையில் எம்மை ஏமாற்றி வாழும் ஒன்றாக மாறிவிடாதா? என்னும் கேள்வியும் எழுகிறது, அவ்வாறாயின் ஏதோ பிறந்துவிட்டோம் வாழ்ந்து முடிப்போம் என ஏனோதானோ என வாழ்ந்தால் அது உண்மையான வாழ்வை அனுபவித்ததாக அமையுமா?

உலகில் இறைவனால்(?) படைக்கப்பட்ட உயிர்களெல்லாம் படப்பின் தத்துவத்தை உணர்ந்து சரியாக வாழவேண்டும் எனக் கொண்டால் ஏனோதானோ என வாழ்ந்துவிட்டுப்போவது இறைவனின் நோக்கத்தின் படி சரியான வழ்க்கை என்னால் வாழ்ந்து முடிக்கப்பட்டதா? என்னும் கேள்வியை எழுப்பும்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் இயற்கை விதிப்படி உயிரங்கிகளின் தோற்றத்தின் நோக்கம் எதுவென வினவினாலும் திரும்பவும் அதுவே விடையாகக் கிடக்கும்,

“எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டுன்று வீடுற்றேன்” என வாசிக்கவும் படிக்கவும் நன்றாகயிருப்பினும் உணரமுடிவதில்லை ஆசையை துறக்க முடியாதென்பதால்,

சரி, வெளியே எதையும் கூறாமல் உள்ளோ குமுறுவோமென்றால் அது என்னையே நான் ஏமாற்றுவது போலாகும், என்னால் எதற்குமே துணிய முடியாது என்னும் நிலைமையை ஏற்படுத்தி என் எதிர்காலமே தங்கி வாழ்வதிலும், சுயமாக முடிவெடுக்க முடியாத கையாலாகாத்தனத்தையும் ஏற்படுத்திவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது.

இதென்ன நிலைமை, என்னையே நான் நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?

எல்லாமே எனக்கெதிராக திரும்பி என்னையே முறைத்துப் பார்ப்பது போல் உள்ளது, அவற்றிற்கு பயந்து தப்பி ஓடுவதா? இல்லை அடிபணிந்து கிடப்பதா? இல்லை என்ன நடந்தாலும் சரி எதிர்த்துப் பார்த்துவிடுவதா? என்ன செய்வது எனத்தெரியவில்லை.

கிரேக்க போர் வீரர்களிடம் ஒரு குணமிருந்தது அது “வீரன் ஒருபோதும் மரணமடைவதுமில்லை அதுபோல் சரணடைவதுமில்லை” என்பதே, இது ஒரு போர் வீரனுக்கு மட்டுமல்ல பல போராட்டங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு தனிமனிதனிற்கும் இருக்க வேண்டிய பண்பல்லவா இது?

எதிர்ப்புகளைக் கண்டு ஓடவெளிக்கிடும் போது எவற்றிலிருந்தும் தப்ப முடியாதெனவும் புதிதான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்,

ஆத்துடன், எதிர்ப்புக்களை ஒருதடவை எதிர்த்து பார்க்க வெளிக்கிட்டால் அதில் பல உடனடியாக ஓடிவிடும் என்பதுவும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

ஆக எதிர்த்துப் பார்க்க துணிந்துவிட்டேன், இருந்தும் எங்கே தொடங்குவதென்பது விளங்கவில்லை,

ஏனெனில் நான் இப்பூமியில் ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டேன்.

இங்கு இனி பெருக்கங்கள்…………….
அநாதை ஆசிரமங்கள்

முதியோர் விடுதிகள்

வழுவிழந்தோர் விடுதிகள்

புத்திசுவாதீனமானோர் ஆச்சிரமங்களின் பெருக்கங்கள்

பிச்சைக்காரர்களின் பெருக்கம்

தெருப்பொருக்கிச் சிறுவர்களின் பெருக்கம்

இரும்புப் பொருள் தேடும் சிறுவர்களின் பெருக்கம்

ஏற ஒரு தேங்காய், இறங்க ஒரு தேங்காய் கேட்கும் சிறுவர்களின் பெருக்கம்,

கட்சிக் கொடிகளின் பெருக்கம்,

கட்சிக் கூட்டங்களின் பெருக்கம்,

தலைவர்களின்(?) வருகைப் பெருக்கம்

உலகவங்கி ஆதரவுப் பெருக்கம்

உள்ளூர் வங்கி ஆதரவுப் பெருக்கம்

காதுகேளாதோருக்கும் இன்னிசை இரவுகள்

கைப்பேசி நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

கூலித் தொழிலாளிகள்

கூவித்திரியும் தொழிலாளிகள்

வறுமைக் கோடே தெரியாமல் வாழ்வோர்

வறுமையே தெரியாமல் வாழ்வோர்

குட்டிக் கோவில்கள்

பெரிய கோவில்கள்

அன்னதான மடங்கள்

அன்பு இல்லங்கள்

காதுகேளாதோர் சங்கம்

வாய்பேசாதோர் சங்கம்

பார்வை இழந்தோர் சங்கம்

வழுவிழந்தோர் தொழிற் பயிற்சி நிலையங்கள்

பேரம்பேசும் தொழில்

சூடான காணி விற்பனை

வாடகைக்கு வீடு விடல்

குளக்காணி ஆக்கிரமிப்பு

மர (காடு) அழிப்பு

குடி நீர்த்தட்டுப்பாடு

குள நீர்த்தட்டுப்பாடு

அதி நவீன வாகன ஓட்டங்கள்

அதிக வெள்ளைத்தோல் வருகை

வெம்மையின் தாக்கம்

மழையின் தாக்கம்

களவின் பெருக்கம்

கணவான்களின் பெருக்கம்

விதைவைகள் பெருக்கம்

தபுதாரர்களின் பெருக்கம்

வாரிசை இழந்த அநாதை பெற்றோர் பெருக்கம்

பொய்மையின் பெருக்கம்

ஏழ்மையின் பெருக்கம்

பணக்காரர்களின் பெருக்கம்

சின்னாபின்னத்தின் பெருக்கம்

சீரழிவின் பெருக்கம்

கழிவுகளின் பெருக்கம்

நுளம்புகளின் பெருக்கம்

நோயாளிகளின் பெருக்கம்

தொற்று நோய் பெருக்கம்

சாதிப்பெருக்கம்

தீண்டாமைப் பெருக்கம்

தீயவர் பெருக்கம்

கயவர் பெருக்கம்

முதுகன்னிகளின் பெருக்கம்

கல்வியறுபட்ட பிள்ளைகளின் பெருக்கம்

நவீனத்தின் பெருக்கம்,

நகல்களின் பெருக்கம்

CD கடைகளின் பெருக்கம்

சில்மிசங்களின் பெருக்கம்

சிரிப்பின் பெருக்கம்

அழுகைகளின் பெருக்கம்

சிறகொடிப்புகளின் பெருக்கம்

சாவின் பெருக்கம்

அநாதை பிணங்களின் பெருக்கம்

சவக்கிடங்கின் பெருக்கம்

தரமிழப்பின் பெருக்கம்

தவிப்புக்களின் பெருக்கம்

வரியின் பெருக்கம்

வம்பின் பெருக்கம்

வாய்ப்பின் பெருக்கம்

வாணிபப் பெருக்கம்

வகைகளின் பெருக்கம்

செருக்கின் பெருக்கம்

பெருமிதத்தின் பெருக்கம்

ஆணவத்தின் பெருக்கம் – இவற்றால்

அழிவின் பெருக்கமும் தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யார் செய்த குற்றம்????????
ஆடு மாடுகள் போல் கூட்டம் கூட்டமாய், காடு, மேடு,பள்ளம், கிடங்கு, வறட்சி, வெள்ளம், ஆறு, கடல், குளம், வயல்வெளி, புற்தரை, மணல்தரை என இவர்கள் கால்கள் பார்க்காத இடமே இல்லை. சுற்றி நீருண்டு அருந்த ஒருதுளி குடிநீரில்லை, பகலெல்லாம் தெரிந்துவிடுவோமோ என்ற பயம், இரவெல்லாம் எதுவுமே தெரியவில்லை என்ற பயம். பதுங்குகுழி வாழ்வு, சத்தம் குறையும் போது வெளியே வந்து வானம் பார்க்கும் வாழ்வு, உணவைப்பற்றி கேட்கவே வேண்டாம் தண்ணீரே தட்டுப்பாடென்னும் போது, அவலக்குரல் ஊரெல்லாம், விடிவு இங்கே கிழக்குக்கு மட்டும் தான் மறைவு இங்கே எல்லாத்திசையிலும், நுளம்புத்தொல்லை பிரச்சனையில்லை, நவீனத்தின் தொல்லை தாங்கமுடியவில்லை.

இந்த விளக்கமில்லாமல் பால் கேட்கும் குழந்தைக்கு என்ன சொல்வது?, விளக்கமே இல்லாமல் இவ்வுலகை பார்க்கத்துடிக்கும் கருவறைச் சிசுவை என்னவென்பது?ஊனமுற்றோரைத் தூக்கித்திரியனும், வயோதிபரைத் தாங்கித்திரியனும், பிள்ளைகளை அணைத்துத் திரியனும், இருக்கிற உணவை அல்லது நீரை எடுத்துத் திரியனும், என்பதே ஒவ்வொரு பெற்றோரினதும் மிகுந்த அடிப்படைத்தேவை இப்போதைக்கு.

இப்போ எங்களிடம் மத பேதமில்லை, சாதிபேதமில்லை, இனபேதமில்லை, காணி, வீடு, வாகனம், சொத்து, வம்சாவழி, கொளரவம் எதுவும் தேவையில்லை, உணவும் உயிரும் கேள்விக்குறியாகும் போது. வளர்த்தகடாவே இந்நிலையில் மார்பில் பாய்கிறது. தடுத்து நிறுத்துகிறது, எதுவுமற்ற எம்மை பாதுகாப்புக் கவசமாக இருக்க கேட்கிறது. ‘ஓ’ என்று கத்தி ஒப்பாரிவைக்க திரணியுமில்லை, சக்தியுமில்லை, எங்கே இந்த சத்தத்தால் வேறு உயிர்ப்பலியின் சத்தம் கேட்காமல் விட்டிடுமோ என்ற பயம் வேறு, கதறியழுவதால் இழக்கப்படும் சக்தியால், இருப்பவரை தூக்கிக்கொண்டு ஓடமுடியாதென்னும் பயம் வேறு.

பாதுகாப்பு வலையமே எமகளமானபோதும், செய்யவழியில்லை அந்த களத்தினுள்ளேயே அரைக் கண் உறக்கம், மூளை எப்போதும் விழிப்பிலேயே. ‘பிடிக்காது இவனை’ என்ற போதும் அவனை நோக்கியே பயணம், அவனிடம் சென்றால் என் உயிர் தப்புமோ இல்லையோ பிள்ளைக்கு உணவு கிடைக்கும் என்ற எண்ணம்தான்.

எவ்வளவோ சாதிபேதம் பார்த்திருப்போம் எம்மூரிலேயே, இன்று எச்சாதிக்காரன் தந்த உணவு என்பதை அலசிப்பார்க்க ‘பசி’ இடம் கொடாது. இவ்விடத்தில் இதை கதைப்பது சரியா என்பதை பார்க்கக்கூடமுடியாது, ஏனெனில் இவ்விடத்தில் சாதிவேற்றுமை, இனவேற்றுமை, மத, மொழிவேற்றுமை குழிதோண்டி புதைக்கப்படுகின்றது, ‘அகதி’ எனும் அந்தஸ்து(?) கிடைக்கப்படுவதால்.

அங்கு சத்தம் கேட்டால் இங்கு ஓடுவோம், இங்கு சத்தம் கேட்டால் அங்கு ஓடுவோம், இரண்டிற்குமிடையில் சத்தம் கேட்டால் முடிவு, ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுதான். இவ்வளவு அவலமும் எம்மைத் துரத்திக்கொண்டிருக்க நாம் துரதிஷ்டசாலிகள் என்று மட்டும் யாரும் நினைத்துவிடக்கூடாது, எமக்காக குரல் கொடுப்போர் உலகின் சகல மூலைகளிலும் உண்டு. எல்லா நாட்டு அரசும் கூட்டம் போடும் (தண்ணீர் போத்தலால் அலங்கரிக்கப்பட்ட வட்டமேசைகளில்), புலம் பெயர்ந்தோர் முழக்கமிடுவர், சுழற்சிமுறை உண்ணாவிரதமிருப்பார்(?), பணம் வசூலிப்பார், ஆனால் என் குழந்தைக்கு ‘தேத்தண்ணீர்’ கொடுக்க மட்டும் எனக்கு வழியில்லை. கோடிக்கணக்கில் மக்கள் குரல், ஆயிரக்கணக்கில் ‘அரசசார்பற்ற நிறுவனங்களின்’ வாகனஓட்டம், மணிக்கொரு கூட்டம், கூட்டப்பட்ட முடிவுகள்தான் என்ன?, அடுத்த கூட்டத்திற்கான நாளைக் குறிப்பதைத் தவிர?,

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது ஒரு மேதையின் வாசகம், எதற்கு ஊர் எல்லாம் அழிந்தபின் என்பதே எம் நிலை.

ஞாயிற்றுக்கிழமை லீவு, AC வண்டியினுள் பயணம், காலை எட்டு மணிக்கும் மாலை ஐந்து மணிக்குமிடையில்தான் வேலை செய்வேன் என்ற அர்ப்பணிப்பு சிந்தையுள்ள தலைவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘அகதிப் பட்டம்’ பெற்றவரே நாம். இந்தப் பட்டத்திற்கு மட்டுந்தான் எதையும் பெறத்தேவயில்லை, எல்லாத்தையும் இழப்பதே அடிப்படைத்தகுதி, இதற்கு ‘உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்’ எனும் இன்னொரு பெயரும் உண்டு (Inter Displaced People, IDPs). பத்தாயிரம் பேருக்கு பத்தாயிரம் உணவு  என்றால், ஒரு லட்சம் பேருக்கு ஒருலட்சம் உணவு தேவையென்பது தெரிந்துகொள்ள நூறு கூட்டம், இறுதியில் ஒரு லட்சம் பேர் வந்ததும் நம்மூர் ஆட்டோ ஒலிபெருக்கியில் ‘உங்கள் சகோதரர்களுக்கு உணவளியுங்கள் ஒரு வீட்டிற்கு குறைந்தது பத்து பார்சலாவது செய்து காலை பத்து மணிக்குள் சந்திப்பிள்ளையார் கோவிலில் ஒப்படையுங்கள்’ என்ற தீர்க்கதரிசனமான வாசகங்கள் ஊர்முழுவதும் முழங்கும்,

எனினும் சேகரிக்கப்பட்ட மதிய உணவுகள் மாலை நான்குமணிக்குள் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் செய்தி, இங்கு உணவு பழுதானால் எதுவும் செய்வதற்கில்லை.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களின் திட்டத்தின் கீழ் மூன்று நாள் உணவுண்ணாத மக்களுக்கான தீர்க்கதரிசனம் இதுதானா? ‘சமாளிக்க முடியேல்ல’ எனக் காரணம் கூறித்தப்பித்துவிடலாம், ஆனால் எப்போதோ தெரியும் எத்தனைப் பேர் அகதிப்பட்டம் சூட்டப்படுவார்கள் என்பது. உடனடித்தேவையான உணவிற்கே நிலை இதுவென்றால், ஏனைய விடயங்களை என்னவென்பது? ஆனால் ஏதேதோ நடக்குது, வாகனம் ஓடி ஒரு வருடத்தில் தேயவேண்டிய எம்மூர் ‘தார்வீதிகள்’ ஒரு மாதத்தில் தேய்ந்தது உண்மை, அப்படியானால் ஏதோ நடப்பது உண்மைதானே, இங்கு யாருக்கு நட்டம் எனக்கேட்டால் ‘அகதிப்பட்டத்தாரைத்’ தவிர மற்றையோருக்கு கொள்ளை இலாபம் என்பது உன்மை, இங்கு கயிற்றுக் கடையில் கூட வரலாறுகானதளவு தட்டுப்பாடென்றால் ஏனைய கடைகளைப் பற்றி கூறுவானேன்?.

நாம் யாராவது எதையாவது தருவார்கள் என வாழ்ந்ததில்லை, எம்மிடமிருந்த எல்லாவற்றையும் பறித்துவிட்டு, எரித்துவிட்டு, இப்போது ஆயிரம் தடவை கணக்கெடுத்து ஆளுக்கொரு பற்தூரிகையும், பற்பசையும்! அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பெரியம்மா, மாமா, தாத்தா, அம்மம்மா, அப்பம்மா, எங்கே எனத்தெரியாத எனக்கு பல்லை விளக்குவதென்பது எவ்வளவு முக்கியத்துவமானது? ‘உணவை மட்டுமாவது தாருங்கள்’ அப்போதுதான் தெரியும் என் உறவுகளுக்கு என்ன நடந்ததென்று.

எமக்காக எவ்வளவோ நடக்குது  ஆனால் நாம் எதையுமே அடையவில்லை, வரிசையில் காத்திருந்து மலம் கழிக்க, முகம் கழுவ, உணவு பெற நின்றதைத்தவிர, அகதிப் பெண்கள் குளிக்குமிடத்தைச் சூழ பாதுகாப்புப்படை,

ஆயிரமாயிரம் திட்டங்கள் எம்மை நெறிப்படுத்த (எம் இயல்பு நெறியைக் குழப்பியவர்களால்) ஏற்படுத்தப்படினும், ஆனால் ஒரு சிறு திட்டம் கூட இருந்திருக்கவில்லை எமக்கிந்தநிலை ஏற்படுவதைத் தவிர்க்க, எந்த தலைவர்களிடமும்.

உணவின்றி பசியுடனிருப்பவனுக்கு தேவை உணவுதான், அவன் யாரிடமிருந்தும் உணவைப் பெற்று உண்பான், அதற்காக அவனை ‘துரோகி’ என யாரும் கூறிவிடமுடியாது. ஏனெனில் இதைக்கூறியவனிற்கும் இதே நிலைதான். இதற்கு ஒரு படி மேலே சென்று ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என கூறிடலாம்,

ஆனால் எல்லாம் மக்களுக்காகவே என்பதை மறந்து, மக்களை சின்னாபின்னமாக்கி, பசிக்கவைத்து, தவிக்கவைத்து, தாழ்த்தவைத்த பின்பும், ‘மக்களுக்காகவே’ என முழங்குவது எந்தவகையில் நியாயம்? எமக்காக எவ்வளவோ போராட்டங்கள் உலகில் அரங்கேறினும் சற்று பின் நோக்கிப் பார்த்தால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பது கேள்வியே. எம் அழிவுகளெல்லாம் உடனுக்குடன் சுடச்சுட உலகிற்கு பரப்பப்படும் நவீன தொழில் நுட்பத்தின் வயிலாக, இதனால் ஏற்பட்டதென்ன? ஊடக வியாபாரம், வசூலிப்புப் பெருக்கம், கவலையற்ற ஒருசில மனங்களையும் புண்னாக்குவது என நீளுகின்றது, சிலருக்கு இலாபம் கொழிக்கிறது, எமக்கோ உதிரம் கொட்டுகிறது.

இவ்வளவு கொடுமைகளின் பின்னும் மனசுத்தியுடன் நடக்கும் உலக அல்லது உள்ளூர்த் தலைவர்கள் யாராவது இருந்தால் காட்டுங்கள்? எமது எல்லா இழப்புகளும் ஏராளமானோருக்கு அரசியலையும் வியாபாரத்தையும் எவ்வளவு தூரம் கூட்டுகிறது, என்பது பற்றி சிந்திக்கவேண்டும். எமது இனத்தை அழித்து எரிந்த சாம்பலை ஆராய்ந்தவன் கூட நல்ல புகழ்பூத்த விருது பெற்ற எழுத்தாளன் ஆகிவிடுகிறான்.

புலம் பெயர்ந்த எம்மவர் ஈடுபடும் போராட்டங்களில் சேரும் சிலர் தாம் தனித்து தெரிந்துவிடுவோமோ என்ற பயத்தால் சேருகின்றனரே தவிர, அங்கும் ஞாயிற்றுக்கிழமை ‘பீர் பார்ட்டி’, முதலாவது , இரண்டாவது பிறந்தநாள்விழா, கோயில் திருவிழா, புதுக்கார் வாங்குதல், பேரம் பேசுதல் போனில் நடத்தியவாறே முழக்கமிடுவதாக நினைக்கின்றார்கள்.

சாடுவது நோக்கமல்ல சகட்டுக்காக செய்யாமல் இருப்பது நன்று. ‘நான் இவ்வளவு பணம்’ கொடுத்தேன் தெரியுமா? என ஒருவன் கூறிவிட்டாலே இங்கு நடப்பது, இனப்பிரச்சனையல்ல, அது கொளரவப் பிரச்சனை.

‘இனப்படுகொலையை நிறுத்து’ என முகம் தெரியாத இலத்திரனியல் ஊடகம் வாயிலாக வெள்ளைமாளிகைத் தலைவருக்கு அனுப்புவதால்கூட ஏதும் பயனில்லை எனும்போது, நண்பர்களுக்கு அனுப்புவதால் என்ன பயனைப் பெற முடியும்? இங்கு ‘தாங்கள் ஒரு தீவிர இன அபிமானி (இனத்தீவிரவாதி), என காட்டிக்கொள்ள முனைகிறார்களா? என யோசிக்கத்தோனுது.

எம்மூரில் ஒரு இறப்பு ஏற்பட்டால் கூட அவ்வூரே துக்க வீடாக மாறிய நிலை போய், இன்று முழு ஊரையுமே இறப்பு வீடாக மாற்றியது யார் குற்றம்? நம்பியவர்கள் குற்றமா?, நம்பி ஏமாந்தவர்கள் குற்றமா?, நம்ப வைத்தவர்கள் குற்றமா?, நப்பிக்கைக்குரியவர்கள் போல் நடந்தவர்கள் குற்றமா?, நம்பி வளர்த்தவர்கள் குற்றமா?, அதை நம்பி வளர்ந்தவர்கள் குற்றமா?, இங்கு படித்து, உயர்கல்வியை அபிவிருத்தியடைந்த நாட்டில் பெற்று, வாழ்வுரிமையும் பெற்று, இங்கு வந்து தன் காதலியை மணந்து, மீள வாழ்வுரிமை பெற்ற நாட்டிற்கே சென்று இண்டர்நெட்டில் புதினம் பார்ப்பவர்கள் குற்றமா?, தலைவர்கள் என கூறிக்கொண்டவர்கள் குற்றமா?, கூறிக்கொண்டிருப்பவர்கள் குற்றமா?, தருபவன் குற்றமா?, தராதவன் குற்றமா?, தரமறுப்பவன் குற்றமா?, தந்து பறித்தவன் குற்றமா?, ஒரு இனத்திற்குள்ளேயே பல பிரதேசவாதம் பேசியவர்கள் குற்றமா?, பேசிக்கொண்டிருப்பவர்கள் குற்றமா?, மரவளர்ப்பை ஆதரித்து மனித இழப்பை தடுக்க முடியாதவன் குற்றமா?, ஏவியவன் குற்றமா?, ஏவப்பட்டவன் குற்றமா?, சகோதரன் செய்த குற்றமா?, அயலவன் செய்த குற்றமா?, அயல் நாட்டுக்காரன் செய்த குற்றமா?, உலகமே செய்த குற்றமா?, குற்றம் செய்தவனை கண்டு பிடிப்பினும், யார் வாதாடுவது?, யார் நீதிபதி?, எங்கு நீதிமன்றம்?, எது தீர்ப்பு?, யாருக்கு தீர்ப்பு?, எப்போது தீர்ப்பு? என்பதெல்லாம் கேள்விகளாகவே நீளும்.

எத்தனையோ அநாதைகள், வலுவிழந்தோர், சிந்தனை பாதிக்கப்பட்டோர், உருவாக்கப்பட்டுவிட்டனர் என்பது காலத்தின் கொடுமை, அவர்களை படமெடுத்து உலகிற்கு காண்பிப்பதைவிட, மனதால் பார்த்து அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நாம் எல்லாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள், இழந்ததை கட்டியெழுப்ப முனைப்புடன் முயல்வோம், ‘இனப் போரை ஆக்கப் போரால் வெல்வோம்’

விம்மல்:

ஒரு எறும்பின் உயிரிற்கும், மனிதனின் உயிரிற்கும் என்ன வித்தியாசம் எனக்கேட்டால், எதுவுமே இல்லை இரண்டு உயிரும் போனால் திரும்பி வரவே வராது என்பது உண்மை. எது எப்படியாயினும், மனிதன் சகல உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்தும் வரை இது உலகில் தொடரும். யாராலும் தடுக்க முடியாது.

எம் சூழலைக்காக்க சில மொழிவுகள்…
** மரம் ஒன்றை நாட்டுவது மகத்தான சிந்தனை…

**அழிவுச்சிந்தனை மரம் ஒன்றை வெட்டும்….

ஆக்க சிந்தனை மரம் ஒன்றை நாட்டும்……

**உங்கள் ஒவ்வொரு பிறந்தநாளிலாவது     ஒரு மரத்தை நாட்டுங்கள்……….

**உங்கள் அன்பிற்குரியவர்களின் பிறந்த நாளிலும் ஒரு மரத்தை நாட்டிப்பாருங்கள்…….

**மரம் ஒன்றை நாட்டுவது  இரத்த தானத்தைப் போன்றது…

**ஆயிரம் அன்னதான மடங்களைக்கட்டுவதை விட ஒரு மரத்தை நாட்டுவத்து சாலச்சிறந்தது…..

**ஒரு மரத்தை வியபாரக்கண்ண்ணோட்டத்தில் பார்க்காமல், சூழல் கண்ண்ணோட்டததில் பார்க்கப் பழகுங்கள்….

**உங்கள் பிள்ளையின் வளர்ச்சியியைக் கண்டு பூரிப்பதைப் போன்று, மரம் ஒன்றின் வளர்ச்சியியைக்கண்டும் பூரிப்படையுங்கள்…..

**ஒரு மரத்தைவெட்டும் முன்,குறைந்தது பத்து மரங்களையாவது நாட்டுங்கள்…..

**உண்மையான சந்தோஷம் மரத்தை நாட்டுவதால் ஏற்படுமேயொழிய, மரத்தை வெட்டுவதால் ஏற்படுவதல்ல…..

உலக காலநிலை மாற்றம்….
உலகளாவிய காலநிலை மாற்றமும் சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களின் தேவையும்

‘உலகளாவிய காலநிலை மாற்றம்’ (Global Climatic Change) எனும் சொற்பதம் தொடர்பாக அண்மைக்காலங்களில், உலகளாவியரீதியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையில் உலகளாவிய காலநிலை மாற்றம் என்றால் என்ன? மிக எளிமையாகக் கூற வேண்டுமாயின், எமது நாட்டினதும் இவ்வுலகத்தினதும் காலநிலை தற்போதுள்ள மாதிரி கடந்தகாலங்களில் இருந்ததில்லை, அதுபோல் எதிர் காலத்தில் இருக்கப்போவதுமில்லை என்பதே! இதற்குக் காரணமாக பல சிக்கற்தன்மை வாய்ந்த இயற்கை மற்றும் மனித சார்பில் எழுகின்ற காரணிகளை நவீன விஞ்ஞானம் பட்டியலிட்டுக்கூறுகின்றது.

நிலைமாறுகின்ற இவ்வுலகில் நிலையானதொன்று ‘தொடர்ச்சியான மாற்றம்’ என்பது மட்டுமே! அதற்காக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. குரங்கிலிருந்து மனிதன் கூர்ப்பின் மூலம் தோன்றினான் எனும் உண்மை மாற்றத்தின் அடிப்படையிலானதே, ஆனால் இதற்கு எடுத்திருக்கக்கூடிய காலம் என்பது மிக நீண்டது, சாதாரண (வாழ்வியல் ரீதியிலான) மனிதக் கற்பனையையும் விஞ்சிய நிலையிலானது. ஆக, உலக காலநிலை மாற்றமென்பதும் (கோட்பாட்டளவில்) இயற்கையானதே, எனக் கூறினாலும் அதன் வேகம் அதிகரிப்பதுதான் தற்போது ஏற்பட்டுள்ள மாபெரும் பிரச்சனை. ஏனெனில் சடுதியான பாரிய அளவிலான மாற்றங்கள் இயற்கைத்தொகுதிகளின் சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியவை.

மனிதனால் வானிலைத்தரவுகளை அளந்தறியக்கூடிய விஞ்ஞானம்சார் நாகரீக வளர்ச்சி ஏற்பட்டதிலிருந்ததான காலத்திலிருந்து களஞ்சியப்படுத்தப்பட்டதான தகவல்களைப் பகுப்பாய்வு செய்யின், கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்களைவிட, கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் அதிகமெனவும், இது கடந்த 25 வருடங்களில் இன்னும் அதிகமெனவும், அதிலும் கடந்த 10 வருடங்களில் இதன் தாக்கம் நன்றாகவே உலகில் உணரப்பட்டதும் உண்மை. மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம்  கடந்த வருடத்தை விட இந்த வருடம் அசாதாரணமாகவே அதிகம் எனக் கூறுமளவிற்குக் குறுகிவிட்டதே உலகளாவிய காலநிலை மாற்றத்தை அறிய சிறந்த உதாரணம். இத்தகைய சடுதியான பாரியளவிலான பிளறல்களுக்கு கட்டுப்பாடற்ற (சூழல் தொடர்பாக சிந்திக்க எத்தனிக்காத முறையில் நடைபெற்ற/நடைபெறுகின்ற) மனித நடவடிக்கைகள்தான் முக்கிய காரணங்கள் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று.

ஒரு காலத்தில் வானம் பார்த்து மழை பொழியுமளவை, உடுக் கோலத்தை கள அனுபவத்தின் அடிப்படையில் பார்த்து எதிர்வு கூறியமை எந்தவளவிற்குத் திருத்தமாக இருந்ததோ தெரியவில்லை; ஆனால் தொழில்நுட்பம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் கூட ‘நாளை மழை பெய்யலாம்’ எனும் தொக்கு நிலை வானிலைத்தரவையே தற்போதும் கேட்கக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணம்தான் என்ன? என வினவினால், ‘இயற்கை மிகவுமே சிக்கற்தன்மை வாய்ந்தது’ என இலகுவாகவே (நாம்) காரணம் கூறித்தப்பித்து விடலாம் (தற்காலிகமாக). இது இயற்கையை நாம் எவ்வளவுதூரம் அறிந்து வைத்துளோம் என்பதை தெளிவுபடுத்தும். இயற்கை என்பதனை நாம் நூறு வீதம் அறிய முடியுமாயின் ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பூமியைக் காக்கலாம் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட எடுகோள் மட்டும் தான். உண்மையில் இயற்கையின் சிக்கற்தன்மையின் ஒருவீதத்தைக் கூட எம்மால் விளங்கிக்கொள்ள இன்னமுமே முடியவில்லை என்பதுதான் வெள்ளிடைமலை. சிக்கலான நேர்கோட்டுத்தனமான இவ்வியற்கைத் தொகுதியை எளிமைப்படுத்தி விளங்குவதற்காக இன்னமும் விஞ்ஞானம் முயலாமல், தொடர்ந்தும் சிக்கலுக்குள் மூழ்கிவிடும் நேர்கோட்டு ஆய்வுப்பாதையிலேயே இன்னமும் பயணிக்கின்றது. உதாரணமாக பூமியதிர்ச்சி, சூறாவளி போன்றவற்றை (அழுத்தம் திருத்தமாக) முன்கூட்டியே அறிவதென்பது இன்னும் முடியாத காரியமாகவே மனிதனுக்கு உள்ளது.

உலகக் காலநிலை மாற்றங்கள் தொடர்பான பாரியளவிலான ஆய்வுகளின் முடிவுகளின் படி, அடுத்துவரும் காலங்களில் ஏற்படும் வறட்சியானது நீண்டதாகவும், மழையானது குறுகிய காலத்தில் அதிகச் செறிவுடனும் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களின் காத்திரமும், உண்மைப்பாடும் எந்தவளவிற்குச் சரி என்பதனைப் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க முடியும். எது எப்படியாயினும், காலநிலை மாறியமையும் அதன் வழியே மழைவிழ்ச்சியின் கோலங்கள் மாறியமையும் உண்மையே.

இதன்பிரகாரம், எதிர் காலத்தில் எமது ஊர்களின் சூழலைத் தீர்மாணிக்கும் காலநிலைக் காரணிகள் (உதாரணமாக, மழைவீழ்ச்சி, வெப்பநிலை, பனி, காற்றின் வேகம், மினி மற்றும் மெகா சூறாவளிகள் போன்றவை) மேலும் மாற்றமடையுமென்பது ஏற்றுக்கெள்ளப்படவேண்டிய கசப்பான உண்மை. காலநிலை மாற்றம் எமது வாழிடங்களின் சூழல்-சமூக செயற்பாட்டு இயந்திரங்களையும் இடைத்தாக்கங்களையும் முற்றாகவே குழப்பிவிடுமென்பதுவும் இன்னுமொரு சீரணிக்க முடியாத (ஆனால் சீரணிக்க வேண்டியதான) அதி-கசப்பான உண்மை. ‘இந்தப் பாரியளவிலானதான காலநிலை மாற்றத்தை எம்மால் எதிர்த்து நின்று நம்வழியில் சமாளிக்க முடியுமா?’ எனக் கேட்டால் ஒரே ஒரு விடைதான் உள்ளது. அஃதாவது ‘நிச்சயமாக முடியாது’, காலநிலைமாற்றத்தினால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளில் இருந்து சடத்துவமான நெகிழ்வற்ற எம் எதிர்ப்புப்பொறிமுறைகள் மூலம் நிச்சயமாகத் தப்பவும் முடியாது. ஆனால,  முகாமைத்துவம் செய்ய முடியும்!  அதாவது வட்டார மொழியிற் கூறுவதானால், ‘எம்மால் சடைந்து விட முடியும்’. ‘சடைந்து விடலே’ சாலச் சிறந்த நிர்வாக யுக்தியென முகாமத்துவத் தத்துவவியலாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ‘சடைவதற்கான’ சாலச் சிறந்த வழிதான் யாது? மேலும், எவ்வாறு சரியான முறையில் எமது சுற்றுச் சூழலை முகாமைத்துவம் செய்வது? தனியொரு முகாமைத்துவ கொள்கையை முழு உலகத்திற்கும் பிரயோகிக்க முடியாது. ஏனெனில் காலநிலையின் தாக்கம் கிராமத்திற்கு கிராமம், பிரதேசத்திற்குப் பிரதேசம், நாட்டுக்கு நாடு வெவ்வேறுபட்டது. எனவே இதன் தாக்கம் சமூகத்திற்கு சமூகம் (அவை வசிக்கின்ற பிரதேசங்களின் பெளதிக அடிப்படையினில்) வெவ்வேறாகவே ஏற்படுத்தப்படும். எனவே, முகாமைத்துவ திட்டங்களானவை அவ்வவ் பிரதேசம்சார் சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட யுக்திகளின் வழியிலேயே அமைய வேண்டும்.

உதாரணமாக இலங்கையின் உலர் காலநிலைப் பிரதேசங்களில், வருடத்தின் பின் நடுக்கூற்றுப் பகுதியில் (அதாவது August தொடக்கம் October வரை) தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும், அதிலும் குறிப்பாக குடிநீர்ப் பிரச்சனை அதிகளவில் ஏற்படும், இதற்கு நல்லதொரு ஆதாரம் மேற்படி பிரதேசங்களின் நகர்ப்புறங்களில், அக்காலங்களில் அதிகளவில் விற்றுத்தீர்க்கும் ‘போத்தலில் அடைக்கப்பட்ட குடி-நீரின்’ அளவைக் குறிப்பிடலாம்.

ஒரு காலத்தில் எமது கிணற்று நீரே சிறந்த குடிநீராக எந்தவித நோயும், மாசும் அற்றதாக இருந்தது (இங்கு ‘முன்னொரு காலத்தில்’ என குறிப்பிட வேண்டி வந்தது எம் துரதிஷ்டமே). இன்றுபோல் என்றுமே கிணற்று நீரிற்குப் பதிலாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பாவிப்பது நீண்டகால அடிப்படையிலான ஒரு சமூக தீர்வாக அமைய முடியுமா? ஆம் எனில், குடி நீருக்கென்றே நாம் தனியாக வருமானம் தேடிக்கொள்ள வேண்டிவரும். உதாரணமாக ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்றிற்கு ஒரு நாளிற்கு 2லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் தேவைப்படுவதாகக் கொண்டால் ஒரு மாதத்திற்கு 9000 ரூபாய் தேவைப்படும்.  (02 X 05 X 30 X 30ரூபாய் = 9000.00). அத்துடன் எமது கிணற்று நீரே எமக்கு நஞ்சு போன்றதாக மாறிவிட்டதாக நாம் கருதி விட்டோமா?,எமது இளம் சமுதாயத்திற்கும் இதே கற்பிக்கப்படும், அவர்கள் தம் இயற்கைச் சூழலைத் தமக்கு எதிரானதொன்றாக எண்ணியபடியே இனிமேல் வளரப்போகின்றனர்.

முன்னொரு காலத்தில் எமது ஊர்களில் எவ்வளவு மழை பெய்தாலும் வீதிகளில் தண்ணீர் தேங்குவதில்லை, ஒரு சில மணித்தியாலங்களுக்குள் குளங்களை நோக்கி ஓடிவிடும், ஆனால் தற்போது சிறு மழைக்கே வீதிகளில் நீர் தேங்கி போக்குவரத்து உட்பட பல்வேறு இடைஞ்சல்கள் வரக் காரணம் என்ன? இந்நிலையில் நகர்ப்புற/கிராமிய மட்ட வாழிடங்களில் வடிகாலமைப்பு என்பதன் முக்கியத்துவத்தினளவு எந்தளவில் நம்மால் உணரப்பட்டிருக்கின்றது?, இதைக்கவனியாமல் நாம் தொடர்ந்து எழுப்பும் மாடமாளிகைகளால் இப்பிரச்சனை மேலும் பூதாகரமாகி எறிந்த பந்து போல் நம்மை நோக்கியே மீளத் திரும்பிவர எவ்வளவுகாலம் எடுக்கும்?

கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாக்கமானது ஒரு காலத்தில் குடிசை வீடுகளில் உணரப்படாதபோதும், தற்போது சீமேந்துக்கூரை, தகரக்கூரை பொருத்தப்பட்ட வீடுகளில் உணரப்படுவதேன்? இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன, வளிபதனாக்கிகளை (Air-condition)  பொறுத்திச்செல்வது எமது சமூகத்திற்குப் பொறுத்தமான சிறந்த இசைவாக்கப் பண்பாக அமைய முடியுமா? அழகுடன் கூடிய மிகுந்த காற்றோட்டமுடையதாக வீடுகளை அமைத்தலும், வீட்டுத்தோட்டம் போன்ற வீட்டையண்டிய சூழலை அமைத்து வீட்டை குளிர்மையாக அமைத்தலென்பதும் மேற்கூறிய நிலைமைக்கு எவ்வாறான மாற்று இசைவாக்கமாகும்? ஆக எமது தற்காலத்து காலநிலைக் காரணிகளுக்கான இசைவாக்க செயற்பாடுகள் எந்தளவுதூரம் நீடித்து நிலைபெறக்கூடியதென்பதை சரிவர உணராமலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.

மிதமிஞ்சிய விளம்பர உலகில், மேற்கொள்ளப்படும் தான்தோன்றித்தனமான சில சுயநலப்போக்குகள், நாகரீக வாழ்க்கைக்குப் பொருத்தமானது என கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதென்பது, தற்போது எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள, ஒரு புற்று நோய் போன்றது. ஒரு விடயத்தை சரியா அல்லது பிழையா என சீர்தூக்கிப் பார்க்குமளவு குறைந்து வருவதால், சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களின் நிலைத்த தன்மை என்பது ஆச்சரியத்திற்குரிய கேள்வியே!

மழை நீர் தேங்கி நுளம்பு பெருகுவதால் ஏற்படும் நேயை குணப்படுத்த மருத்துவச் செலவும், நுளம்பை கட்டுப்படுத்த விதவிதமான நுளம்புத்திரிகள், நுளம்பு வலை, மருந்து தெளிக்கப்பட்ட நுளம்பு வலை (?…..) என எமது கதை நீளுகிறதே தவிர ‘நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துங்கள்’ என பிரச்சாரம் செய்வதற்கும் ஏற்படும் செலவில் ஒருபகுதி பயன்கூடப் பெறப்படுவதில்லை. ஒரு ஊரிலுள்ள அனைத்துவீடுகளிலிம் நுளம்பு ஒழிக்கப்ட்டாலும் ஒரு வீட்டின் ‘மலக்குழி’ சரிவர இல்லாவிடில் அவ்வூரின், நுளம்புப் பிரச்சனை ஒழிக்கமுடியாதது. இவ்வாறான நிலைமைகள் தொடரின் மேலும், மேலும் குறுகியகால சமூக இசைவாகங்களால் பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

உலர் வலையங்களில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் ‘சோளகக் காற்று’ தற்போது வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை இதனால் அக்காலங்களில் வானில் பறக்கும் பட்டங்களுமில்லை, அத்துடன் வானம் பார்த்துப்பயிரிடும் விவசாயிகளின் மனம் குளிர ஒழுங்கான மாரி மழை வருவதுமில்லை! சூழல் மாசாக்கத்திற்கு காரணம் தொழிற்சாலைகள் மட்டுந்தான் எனக்கூறி முழுப் பழியையும் அவர்களின் மீதே சுமத்திவிட முடியாது, ஏனெனில், நாம் கூட்டி எரிக்கும் குப்பைகளால் ஏற்படுத்தப்படும் புகை, பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படப்போகும் நீண்ட காலப் பிரச்சனை பற்றி ஆராய்வதுமில்லை. இவ்வாறான செயற்பாடுகளுக்கான தீர்வை தனி ஒரு மனிதனால் மட்டுமே காண முடியாது, அது வைக்கோல் போரில் மறைந்திருக்கும் ஒரு சிறு குண்டூசியைத் தேடுவதற்கொப்பானது. நிலைத்த நீடித்த அபிவிருத்திப் பாதையிலான தீர்வு என்பது சமூகங்கள் இணைந்த ஒருமைப்பாட்டுடன் முயன்றால் மட்டுமே சாத்தியம். ‘வெள்ளம் வந்த பின்னர் அணை கட்டுதல்’ என்பதன் பொருள் எம் எல்லோருக்குமே தெரியும். பாரிய பாதகமான விளைவின் பின்னர் அழிவடைந்த நிலையில் சிந்திப்பதால் ஏற்படும் பயனை விட, முன் கூட்டியே சிறந்த முகாமைத்துவ வழிகளை கண்டு எமது சூழல் வளங்களின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்தி பயனடைய முடியும். இதற்கு ‘சமூக மட்டத்திலான இசைவாக்கம்’ எனும் தொனிப் பொருளினூடு ஆராய வேண்டும்.

செயற்கை உரங்களின் பாவனையென்பது எமது நிலத்தை பாதிக்கும் எனத் தெரிந்தும், இட்ட பயிரின் உடனடி விளைச்சலைப் பெறுவதற்கு மீளமீள செயற்கை உரத்தை இடுவதன் பயன் என்ன? உரக் கம்பெனி இலாபம் அடைவதே ஒழிய எமது நிலம் ‘உவராக்கம்’ அடைந்து பாழாகிப் போவதே நடை பெறும். எதிர் காலச் சந்ததிக்கு குறைந்தது நல்ல நிலத்தை கூட விட்டுவைக்காத சுயநலவாதமான, வெறுப்பிற்குரியவர்களாக எம்மைத் தூற்றுவதற்கு இடமளிப்போமெனில், நாம் பூமியில் வாழ்ந்த ஒரு மோசமான சந்ததியாகி விடுவோம் என்பது உண்மை.

எமது சமூகம் ஆகக்கூடுதலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, விவசாயத்தின் ஏற்ற, இறக்கங்களானது சமூகத்தின்பால் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆக விவசாயத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்தி மக்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவேண்டியது சகல புத்திஜீவிகளினதும் தலையாய கடமை. தற்போது நம் முன் எழும் கேள்வி யாதெனில், “எதிர்காலத்தில் விவசாயத்துறைக்கு யாதேனும் சவால் உள்ளதா, மேலும் அச்சவால் தான் யாது என்பதே?. அவ்வாறு உள்ளதாயின் அது எவ் வகையிலானது ? அத்தகைய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பதே!

விவசாயம் என்பது முழுவதுமாக சூழல் காரணிகளில் தங்கியுள்ளது, சூழல் காரணிகளில் ஏற்படும் பாதிப்புகள் விவசாயத்தை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பாதிக்கும். ஆக தற்போது உள்ள அளவினிலும் பார்க்க பாரிய பூதாகரமான அளவுகளில், எதிர்காலத்தில் சூழல் காரணிகளில் மாற்றங்கள் ‘உலகளாவிய காலநிலை மாற்றங்களால்’ ஏற்படப்போவது நிஜம்.

பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளின் முடிவில், காலநிலை மாற்றம் என்பதன் உலகளாவிய விளைவுகள் மிக மிகப் பாரதூரமானவை என்பது உலக அரங்கில் அராய்ச்சி மாநாடுகளினூடாகவும் (World Conferences), வேறு பல ஊடக வாயில்களினூடகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. காலநிலையில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி மேற்கொள்ளப்படும் (தற்போதைய) ஆராய்ச்சிகளின் முடிவின் படி உலகளாவிய காலநிலைமாற்றமானது தவிர்க்க முடியாதது. அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனினும், இவ்வகை எதிர்வுகூறல்கள், எவ்வளவு தூரம் நம்பகத்தன்மையானவை என்பதும் விஞ்ஞான உலகின் முன் பாமரர்களால் வைக்கப்படும் ஒரு முக்கியமான கேள்வியே?, எதிர்காலத்தின் காலநிலையை எம்மால் சரியாக எதிர்வுகூறமுடியுமாயின் இயற்கை எமது கைக்குள் உள்ளதெனலாம். அது (நிச்சயமாகவே) உண்மை அல்ல! ஏனெனில்,சில வருடங்களின் முன் ஏற்பட்ட‘சுனாமியின்’ தாக்கமே இன்னும் எம்மைவிட்டு அகலவில்லை. ஆக, முற்போக்கான எமது விஞ்ஞானத்தினால் கூட இயற்கையின் சில விடயங்களை அறிந்துகொள்வது இதுவரை சாத்தியமாகவில்லை என்பது உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.  எது எவ்வறு இருப்பினும், முழுமையற்றதான விஞ்ஞானத்தின் துணையை மாத்திரம் கொண்டு எம்மால் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள முடியாது என்பது வெள்ளிடைமலையே அப்படியாயின், எந்த வழி உகந்த வழி? மிகவும் தோதானது மீண்டும் இயற்கை வழிக்குத் திரும்புதல் என்பதுவே இம்மாற்றமானது சமூக மட்டத்தில் ஏற்படல் வேண்டும் இதற்குச் சமூகமானது இயற்கை வழியில் இசைவாக்கமடைவதன் மூலம் எவ்வகையான குழப்ப நிலையையும் காத்திரமாக எதிர்கொள்ளும் வலிமை பெற்றதாக அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள், எதிர் காலத்தில் மனிதனுக்குத் தேவையான உணவை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும், அவ்வாறல்லாத பட்சத்தில் உணவுத்தட்டுப்பாடென்பது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும், அந் நேரத்தில் உலகம் குறுகிய காலத்திட்டத்தை முன் வைக்கும், இது தொடர்ந்து ஒரு நீண்ட காலப்பிரச்சனையாக மாறி அதனுள் உலக மக்கள் சிறைப்பட நேரிடலாம். உலகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தனித்தனியாக (discretely) மேற் கொள்ளப்படுவதுடன் அவற்றின் முடிவுகள் எவ்வளவு துரம் மக்களைச் சென்றடைகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அத்துடன் பல துறைகளிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்சிகள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தப்படுவதில்லை. ஆராய்ச்சி முடிவுகள் பல வெளி உலகுக்கு கொண்டு வரப்படாமலே முடங்குகின்றன, இன்னும் சில வெளிக்கொண்டு வரப்பட்டும் அவை விஞ்ஞான ரீதியிலான (Scientific) மொழியில் இருப்பதால் சாதரண மக்களால் விளங்கிக்கொள்ளப்பட முடியாதுள்ளது, இக் குறைபாட்டை நீக்க சமூக நிலையில் சாதாரண மக்கள் விளங்கிக்கொள்ளக்கூடியவாறு ஆராய்ச்சி முடிவுகளை பிரதேச ரீதியிலான மொழிகளில் மாற்றம் (Local language) செய்யப்பட வேண்டியது மிக மிக அவசியம்.

மேலும், உலகளாவிய ரீதியிலான காலநிலை மாற்றமென்பது (Global Climatic Change) சொல்லளவில் (மட்டுமே) பாமர மக்களிற்கு தெரியுமேயொழிய அதன் உண்மை நிலை விளக்கமாகத் தெரியாது. சாதாரண விவசாயி ஒருவரிடம்,  “உலகளாவிய காலநிலை மாற்றம் தெரியப்படவேண்டியதன் அவசியம் என்ன?” என வினவினால், விவசாயத்திற்கும் காலநிலை மாற்றத்திற்குமிடையான தான் அனுபவ ரீதியில் அறிந்து கொண்ட தொடர்புகளைக் கொண்டு விளக்கமளிக்க முயல்வார்.  உண்மையில், விவசாயிகளுக்கு, மேற்படி விடயம் பற்றிய முழுமையான அறிவு (அவர் தம் தொழில் சார்ந்து) புகட்டப்படுதல் இன்றியமையாததாகின்றது. உலக காலநிலை மாற்றமானது நிச்சயமாகவே நாடுகள் ரீதியிலும், பிரதேச ரீதியிலும், மாவட்டரீதியிலும், ஏன் கிராம ரீதியிலும் பாதிப்பை வெவ்வேறு வகையில் ஏற்படுத்தும். கிராமமட்டத்தில் மக்கள் சமூகங்கள் தற்போது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிற்கெதிராக மேற்கொள்ளும் இசைவாக்க நடவடிக்கைகள் எதிர் காலத்திற்குப் பொருத்தமானதாக அமையுமா? என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். இதற்கு நாம் எவ்வாறு விடை காண்பது?  ஒரு தடவை பொழியும் மழை, காலம் முந்தியோ அல்லது காலம் பிந்தியோ ஏற்படுமாயின் விவசாயிகள் பாரியளவு நட்டத்தை எதிர் நோக்குவர். காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை விவசாயிகளாலும்  அண்மைக்காலங்களில் நன்கு உணரக்கூடியதாகவுள்ளது.

“தற்போதுள்ள (அரையும் குறையுமான விளக்கங்களின் அடிப்படையில்) அமுல் படுத்தப்பட்டு வரும் சமூக அடிப்படையிலான இசைவாக்கங்கள்  இனி வரும் காலங்களிற்கு எவ்வளவு தூரம் பொருத்தமானதாக  இருக்கும்?”,  என்பது எம் முன் உள்ள மற்றுமொரு கேள்வி. எனவே, எதிர் காலத்திற்குப் பொருத்தமானதொரு  கட்டமைப்புச் சார் சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களை  உலக காலநிலை மாற்றத்திற்கேற்றாற் போன்ற முகாமைத்துவ கொள்கைகளை (Management Strategies) உருவாக்கி நீடித்து நிலை பெறக்கூடியதான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். இதுவே சிறந்த ஒரே ஒரு வழி! இந்தத் தீர்வை எட்டுவதற்கான வழிவகைகளை ஆராய்வது என்பது கீழ்வரும் கேள்விகளுக்கான விடைகளை காணுவதன் மூலம் அடையப் படலாம்.

•	சமூக அடிப்படையிலான இசைவாக்கம் என்றால் என்ன?

•	இது தொடர்பாக மக்களுக்கு உள்ள விழிப்புணர்வினளவு (Awareness) யாது?

•	சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களையும் அவற்றின் பொருத்தப் படுகளின் காத்திரத்தையும் ஆராய்வதற்கு முன்வரக்கூடிய தகமை பெற்ற ஆராய்சியாளர்களினளவுதான் என்ன?

•	இவ்வகையில் ஈடுபடுவத்ற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வரும் மன நிலையில் உள்ளனரா?

•	இவ்வாறான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கக்கூடிய நிறுவகங்கள் போதியளவு பண வலிமை பெற்றுள்ளனவா?

•	உலகளாவிய காலநிலை மாற்றங்களை உள்ளூர் காலநிலை மாற்றங்களுடன் தொடர்புபடுத்துவதற்கான பிரதேச மட்டத்திலான ஆராய்ச்சியாளர்களினளவு  இலங்கையைப் பொறுத்தளவில் போதுமானதா?

•	இல்லை, இப்படியான துறையில் ஈடுபடுமளவிற்குப் பகுத்தறிவு படைத்த ஒரு சிலராவது ‘புத்தி ஜீவிகள்’ எனக் கூறிக் கொள்ளும் மட்டங்களில், இலங்கையில் போதுமானவளவு உள்ளனரா?

•	உள்ளூர் காலநிலை மாற்றங்கள் தொடர்பான எமது தற்போதைய அறிவு போதுமானதா?

•	இயற்கை அனர்த்தங்களுக்காக தற்போதுள்ள முகாமைத்துவ நடவடிக்கைகள் யாவை?

•	அப்படி யாதாயினும் முகாமைத்துவ செயற்பாடுகள் உண்மையிலேயே செயற்படுத்தப்பட்டிருப்பின், அந்நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மை எம்மால் உணரப்படுகின்றதா? இல்லை, அவை பெயரளவில் மட்டுமே தானா?

•	மேலும், எமது நாட்டைப் பொறுத்தளவில் எதிர்கால காலநிலை/சூழலியல் மாற்றங்களுக்கான தயார்படுத்துகைகள், விவசாயத்தூடான பொருளாதார ஸ்திரத்தன்மை, தற்போதுள்ள விவசாய கொள்கைகள்,எதிர்காலத்திற்குப் பொருத்தமான விவசாயக் கொள்கைகள், விவசாயத்தினூடான நீடித்து நிலைபெறச்செய்வதற்கான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், போன்ற இன்னோரன்ன காரணிகளின் பொருத்தப்பாடுகள் பற்றியும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தற்போது எமக்கு முன் உள்ள மேற்படி கேள்விகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு பயனுடைய முடிவுகளை அபிவிருத்தி நோக்கில் வழங்கக்கூடியவர்கள் யார்(?) என்பதே! ஏனெனில், எம் புத்திஜீவிகள் பலர் ஒரு சில வட்டத்திற்குள் நின்றுகொண்டு செயற்படுவதும், அல்லது இன்னுமொருவரை கைநீட்டி காட்டிவிட்டுத்தப்புவதுமாக உள்ளனர். இன்னுமொரு வகையில், “இவ்வாறான விடயங்களை யாரேனும் வெளிநாட்டுக்காரர் (white skinned foreigner) கோட், சூட்டுடன் வந்து கூறினால் மட்டுமே தான் ஏற்போம்” எனும் மனப்பான்மையும் நம்முள் ஆழ ஊடுருவிவிட்ட துரதிஷ்டமான போக்கும் எமது செயற்பாடுகளை முடக்க காரணமாகின்றன. உண்மையில் எமது கிரமங்களின் நிலைமையை எம்மைத்தவிர ஆழ அறிந்தவர்கள் வேறு யாருமாக இருக்க முடியது, அவ்வாறிருக்க இப் பிரச்சனைக்கான சரியான தீர்வை காண வேண்டிய தலையாய கடமையும் எமக்கே உள்ளது. இற்றைவரையில், இப்பிரச்சனைக்கான தீர்வை காணுவதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்ளாமையானது எமது சமூகத்திற்கிழைக்கும் மாபெரும் துரோகமாக அமையும்.

எமது சூழலில் உள்ள இயற்கை வளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு பண்டைச் செவ்விந்தியரின் கோட்பாடு ஒன்றை எடுத்துக்கூறலாம்.

அது யாதெனில், தாம் பயன்படுத்தும் இயற்கை வளங்கள் எல்லாம் தமது எதிர்காலச் சந்ததியிடமிருந்து கடனாகத் தாம் பெற்றவை என்றே அவர்கள் கருதினர்! ஆதலால், கடன் பட்டார் நெஞ்சுடனேயே இயற்கை வளங்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி ஆயிரமாயிரம் வருடங்களாக தன்னிறைவான சமூகமாக வாழ்ந்து வந்தனர். அது அமெரிக்காவில் ஐரோப்பிய வழி வந்த மாந்தர் நவீனத்துவ முறையில் குடியேறத் தொடங்கியவுடன் மாறத் தொடங்கியது என்பது வருத்ததுடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இன்றோ எம் இலங்கை சமூகத்தில் பலர் (அல்லது அனைவருமே) இயற்கை வளங்களென்பது எமது மூதாதையரிடமிருந்து சொத்தாக அல்லது அன்பளிப்பாக அல்லது சீதனமாகப் பெற்றதாக கருதுவதால் அதை உதாசீனப்படுத்துகின்றனர், அவர்கள் எதிர்கால சந்ததியைப் பற்றி கவலைப்படுவதுமில்லை, அதற்காக வளங்களைப் பேணுவதுமில்லை!

சமூகமொன்று விழிப்புணர்வு பெற்று சரியான இசைவு பெற்றால் மட்டுமே அபிவிருத்தி சூழலுடனியைந்த முறையில் ஏற்படும். இலங்கையில் அந்த நிலைக்கு நாம் வருவதற்காக நிறையவே பாடுபட வேண்டிய தருணத்தில் நாம் இப்போது இருக்கின்றோம், இல்லையெனில் காலநிலை மாற்றத்தின் சீற்றத்தால் அழிந்தொழிந்து போய்விடுவோம் என்பது உறுதியே! ஆக ‘உலகளாவிய காலநிலை மாற்றமென்பதும்’ அதனூடு இசைந்தவாறான ‘சமூக அடிப்படையிலான இசைவாக்கங்களென்பதும்’ இனி வரும் காலங்களில் மனிதனால் ஆராயப்படும் முக்கியமான விடயமாகவிருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

இலவசம்…இலவசம்…..இலவசம்……
காலை எழுந்ததும் ‘ உங்களிடம் பணமே இல்லை’ என்ற இலவசஅருள் வாசகத்தை கேட்க விருப்பமா?,

‘ஐம்பது சதம், ஒரு ரூபாய், ஒருரூபாய் பத்து சதம்’  என்ற விலைக்கழிவுகளை பெற விருப்பமா?,

‘இந்தமாசம் முழுக்க இலவசம், அடுத்தமாசத்தை பற்றித் தெரியாது’ என்ற குழுவுக்குறி சொல்லைக்கேட்க ஆசையா?,

‘அவங்களை விட நாங்கள் பரவாயில்லை, எங்களைவட மத்தவங்கள் மிக மோசம்’ எனும் விளம்பரங்களை அடிக்கடி கேட்க விருப்பமா?

உங்கள் விருப்பத்திற்குரியவர்கள் ‘எப்போதும் வேரொரு தொடர்பிலிருக்கின்றார்’ என்னும் குடும்ப விருத்திக்குரிய வாசகத்தை அறிய விருப்பமா?,

‘போட்டகாசு எப்பிடி போச்சின்னே தெரியாது’ என யாரிடமாவது கூற விருப்பமா?,

உயிரே போகப்போகும் சந்தர்ப்பத்திலும் அழகான இளம் பெண்னின் குரலை கேட்க விருப்பமா?,

உங்கள் பொக்கட்டிலுள்ள காசை ஒரே முறையின் கீழ் எந்தப் பொருளும் வாங்காமல் செலவழிக்க விருப்பமா?,

அவசரமான வேலை ஒன்றை செய்ய வெளிக்கிட்டு  உச்சந் தலைக்கு கோபமேறி கையிலுள்ளதை போட்டு உடைக்க விருப்பமா?, ஒரு நாளின் நேரத்தை பல வகுப்புகளாக பிரித்து, நடுநிசி நேரத்தில் அதுவும் விடியக்காலை இரண்டு மணியிலுருந்து நான்குமணிவரை பத்தே சதம்தான் எனும் மிகப் பிரயேசனமான சலுகையைப் பெற விருப்பமா?,

சாவு வீட்டில் நீங்கள் இருந்தாலும் ‘பெரிய சத்தம் போடவிருப்பமா’

இதோ மிக இலகுவானவழி:

உடனேவாங்குங்க எங்க கம்பெனி ‘சிம் காடை’

விம்மல்: எத்தனையோ தொல்லை பேசி கம்பெனிகள் வந்தாலும் எதிலாவது ‘அழைத்தவுடன் தொடர்பு கிடைக்காதா’? . விதவிதமாக எம்மை மயக்கி காசு பறிக்கும் நவீன உலக, நாகரீகத்தின் அடிப்படையே  இதுதானா?